/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மூன்று நாட்களாக வழிந்தோடும் கழிவுநீர்; ரோஜா பூங்கா சாலையில் சுகாதார சீர்கேடு

UPDATED : மார் 07, 2025 09:23 AM
ADDED : மார் 06, 2025 09:36 PM

ஊட்டி; ஊட்டி ரோஜா பூங்கா சாலையின் மையப்பகுதியில், மூன்று நாட்களாக வழிந்தோடும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட ரோஜா பூங்கா செல்லும் சாலையின் வழியாக, நெடுஞ்சாலை துறை அலுவலகம், தனியார் கல்லுாரி மற்றும் ஏராளமான குடியிருப்புகளுக்கு வானங்கள் செல்கின்றன. இப்பகுதியில், நகராட்சி சார்பில் குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது.
இப்பகுதியில், கழிவு நீர் சூழ்ந்துள்ளது. இவ்வழியாக நடந்து செல்லும் பொது மக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு இடையே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கடும் துர்நாற்றத்தால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.
மூன்று நாட்களாக வழிந்தோடும் கழிவு நீர் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தும், நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாததால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பகுதியில் பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.