ADDED : ஜூலை 15, 2026 07:01 PM
அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுார் சி.எம்.எஸ்., அருகே சாலையில் அடிக்கடி ஓடும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட சி.எம்.எஸ்., பகுதியில் மாணவர்கள் விடுதி, தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் லேம்ஸ் ராக், சிங்காரா சாலைகள் சந்திப்பு பகுதியில் ஒடுகிறது.
இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் நடைபயிற்சி செல்வோரும் சிரமப்படுகின்றனர். நோய் பரவும் அபாயம் உள்ளது. இவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளும் அதிருப்தியடைந்து செல்கின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
