/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பால்வினை நோய்கள் கிராமங்களில் விழிப்புணர்வு 10 கிராம ஊராட்சிகள் தேர்வு
/
பால்வினை நோய்கள் கிராமங்களில் விழிப்புணர்வு 10 கிராம ஊராட்சிகள் தேர்வு
பால்வினை நோய்கள் கிராமங்களில் விழிப்புணர்வு 10 கிராம ஊராட்சிகள் தேர்வு
பால்வினை நோய்கள் கிராமங்களில் விழிப்புணர்வு 10 கிராம ஊராட்சிகள் தேர்வு
ADDED : ஆக 31, 2024 02:18 AM
ஊட்டி;'மாவட்டத்தில், 10 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு எச்.ஐ.வி., - எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டியில், உலக இளைஞர் தினத்தை ஒட்டி, எச்.ஐ.வி., - எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஊட்டி ரயில் நிலையத்தில் துவங்கிய பேரணியை கலெக்டர் லட்சுமி பவ்யா துவக்கி வைத்தார்.
பேரணி, மார்க்கெட், மணிகூண்டு, ஏ.டி.சி., வழியாக சாந்தி விஜய் பள்ளியில் நிறைவடைந்தது. மாணவ, மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட பலர், கையில் பதாகைகள் ஏந்தியப்படி பேரணியில் பங்கேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
10 கிராமங்கள் தேர்வு
மேலும், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் உள்ளிட்ட நான்கு வட்டாரத்தில், 'ஆட்டோக்களில் எச்.ஐ.வி., - எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டுதல்; எச்.ஐ.வி., - எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கல்லுாரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துதல்; மாவட்டத்தில் உள்ள, 35 கிராம ஊராட்சிகளில், 10 கிராம ஊராட்சியினை தேர்வு செய்து கிராம ஊராட்சிகளிடையே கருத்தரங்கம்; கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி நடத்தி பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது,' என, முடிவெடுக்கப்பட்டது.
முன்னதாக, ஊட்டி ரயில் நிலையம் முன்பு, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுபாடு சங்கம் சார்பில் எச்.ஐ.வி., - பால்வினை நோய் குறித்து ஆலோசனை வழங்கி, பரிசோதனை செய்ய கூடிய நடமாடும் வாகன இயக்கத்தை கலெக்டர் துவக்கி வைத்து, ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஒட்டினர்.
ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டீன் கீதாஞ்சலி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, இருப்பிட மருத்துவர் ரவிசங்கர், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலக திட்ட மேலாளர் அறிவழகன், டாக்டர்கள், செவிலியர்கள் மாணவ, மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.