/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் ஒற்றை கொம்பன் உலா: மக்களை விரட்டுவதால் அச்சம்
/
சாலையில் ஒற்றை கொம்பன் உலா: மக்களை விரட்டுவதால் அச்சம்
சாலையில் ஒற்றை கொம்பன் உலா: மக்களை விரட்டுவதால் அச்சம்
சாலையில் ஒற்றை கொம்பன் உலா: மக்களை விரட்டுவதால் அச்சம்
ADDED : ஜூன் 12, 2024 12:48 AM

குன்னுார்;'குன்னுார் மலைபாதையில் முகாமிட்ட ஒற்றை கொம்பன் யானை சாலையை கடக்கும் போது மக்களை விரட்டுவதால், பயணிகள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குன்னுார் மேட்டுப்பாளையம் மலை பாதையில் முகாமிட்ட ஒற்றை கொம்பன் காட்டு யானை கடந்த சில நாட்களாக காட்டேரி, டபுள் ரோடு லாஸ் பால்ஸ் பகுதிகளில் சென்று குடியிருப்பு அருகே வாழை மரங்களை உட்கொண்டு சேதம் செய்தது.
இதனை கண்காணித்து வந்த வனத்துறையினர், டான்டீ அருகே யானை சாலையை கடக்கும் போது, இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். சில நேரங்களில் யானை மக்களை விரட்டும் செயல் தொடர்கிறது. நாள்தோறும் யானைகளை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
வனத்துறையின் கூறுகையில்,'குன்னுார் மலைபாதையில் முகாமிட்ட ஒற்றை கொம்பன் யானை சாலையை கடக்கும் போது மக்களை விரட்டுவதால், பயணிகள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்', என்றனர்.