/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மொழிபெயர்ப்பு இலக்கிய விருது பெற்ற தினேஷ்
/
மொழிபெயர்ப்பு இலக்கிய விருது பெற்ற தினேஷ்
ADDED : ஜூலை 27, 2024 02:18 AM
பாலக்காடு;கவிதை-, இலக்கிய கலை-ப்பண்பாட்டு மன்றத்தில், மொழிபெயர்ப்பு இலக்கிய விருதை பாலக்காட்டை சேர்ந்த தினேஷ் பெற்றார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கன்னிமாரி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். மொழிபெயர்ப்பாளரான இவர், பாலு மகேந்திராவின் சுயசரிதை குறிப்புகள், நேர்காணல்கள், அவரை பற்றி சினிமா பிரபலங்களின் நினைவுகள் கொண்ட 'அழியாத கோலங்கள்' என்ற புத்தகத்தை 'செல்லுலாய்டு பொயட்' என்ற தலைப்பிட்டு, மலையாளத்தில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
நேற்று முன்தினம் மாநில கவிதை-, இலக்கிய கலை-ப்பண்பாடு மன்றத்தின் மொழிபெயர்ப்பு இலக்கிய விருது அவருக்கு வழங்கப்பட்டது.
திருவனந்தபுரம் ஒய்.எம்.சி.ஏ., பிரிட்டிஷ் நூலக ஹாலில் நடந்த மன்றத்தின் மாநாட்டை தொல்லியல் துறை அமைச்சர் கடன்னப்பள்ளி ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். கலை மற்றும் இலக்கிய சிந்தனையாளர் ஜிதேஷ், மொழிபெயர்ப்பு இலக்கிய விருதை தினேஷுக்கு வழங்கினார்.
பண்பாட்டு மன்றத்தின் தலைவர் பத்ரி, பந்தளம் சுதாகரன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.