/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஸ்மார்ட் உபகரணம்: அரசு பள்ளிக்கு உதவி
/
ஸ்மார்ட் உபகரணம்: அரசு பள்ளிக்கு உதவி
ADDED : ஜூலை 06, 2024 01:54 AM
பெ.நா.பாளையம்;துடியலுார் அருகே கதிர்நாயக்கன் பாளையத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைக்கான கற்பித்தல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மெட்ரோ டைனமிக்ஸ் ரோட்டரி சங்கம், இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு நவீன உபகரணங்களை பயன்படுத்தி கற்றலை மேம்படுத்த, 1.80 லட்சம் ரூபாய் மதிப்பு 'ஸ்மார்ட் டிவி' வழங்கியது. நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சங்க தலைவர் இஷிதா பன்சாலி முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்க கிராமப்புற பணிகளின் தலைவர் சேதுராமன் வரவேற்றார்.
தலைமை ஆசிரியை மஞ்சுளா, பள்ளி மேம்பாட்டுக்கான செயல் திட்டங்கள் குறித்து விளக்கினார். சங்கத்தின் துணை ஆளுநர் கமல் குமார், சங்கத்தின் செயலாளர் வித்யா நடராஜன் ஆகியோர் ஸ்மார்ட் டிவியை பள்ளிக்கு வழங்கினர். நிகழ்ச்சியில், பெரியநாயக்கன்பாளையம் வட்டார ஆசிரியர் பயிற்றுநர் நித்யா ராஜகோபால், குருடம்பாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர் ராஜாமணி, துடியலூர் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியை சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிறார் இலக்கியவாதி சரிதா ஜோ, சிறப்பு விருந்தினராக பங்கேற்று, குழந்தைகளுக்கு கதைகளை சொல்லியதோடு, தான் எழுதிய புத்தகங்களையும் பரிசாக வழங்கினார்.
ஆசிரியர் ராஜேஷ் குமார் நன்றி கூறினார்.