/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழங்குடி பெண்களுக்கு சோப்பு பினாயில் தயாரிப்பு பயிற்சி
/
பழங்குடி பெண்களுக்கு சோப்பு பினாயில் தயாரிப்பு பயிற்சி
பழங்குடி பெண்களுக்கு சோப்பு பினாயில் தயாரிப்பு பயிற்சி
பழங்குடி பெண்களுக்கு சோப்பு பினாயில் தயாரிப்பு பயிற்சி
ADDED : மே 28, 2024 12:11 AM
கூடலுார்:மசினகுடி, பொக்காபுரம் பகுதி பழங்குடியின பெண்களுக்கு சோப்பு, பினாயில் தயாரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
மசினகுடி, போக்காபுத்தில், பழங்குடியினர் மகளிர் சுய உதவி குழுவுக்க, 'ஆல் த சில்ட்ரன்' அமைப்பு உட்பட தன்னார்வ அமைப்புகள் சார்பில் சோப்பு மற்றும் பினாயில் தயாரிப்பு குறித்து பயிற்சி முகாம் நேற்று நடந்தது அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் தலைமை வகித்தார். நிர்மல் சொசைட்டி ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
பயிற்சி முகாமை, கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியன் துவக்கி வைத்தார்.
பயிற்சியாளர் ஆரோக்கியசாமி சோப்பு மற்றும் பினாயில் தயாரிப்பு குறித்து செயல்முறை பயிற்சி அளித்தார். பயிற்சி முகாமில், தண்டு மாரியம்மன் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.