/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மழை வெள்ளத்தில் கால்பந்து விளையாட்டு
/
மழை வெள்ளத்தில் கால்பந்து விளையாட்டு
ADDED : ஜூலை 02, 2024 12:31 AM

கூடலுார்:கூடலுாரில் நிலுவையில் உள்ள பகுதியில் மழை வெள்ளத்தில் வீரர்கள் 'வாட்டர்' கால்பந்து விளையாடி மகிழ்ந்தனர்.
நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து, நேற்று அதிகாலை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, விவசாய தோட்டங்கள், குடியிருப்புக்குள் நுழைந்தது. மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
இந்நிலையில், தொரப்பள்ளி இருவயல் பகுதியில் கால்பந்து விளையாடும் வயல் பகுதியில் மழை நீர் சூழ்ந்தது. நேற்று காலை மழையின் தாக்கம் குறைந்தது.
தொடர்ந்து, அப்பகுதியை சேர்ந்த கால்பந்து வீரர்கள், வயலில் சூழ்ந்த மழை வெள்ளத்தில் இறங்கி, 'வாட்டர்' கால்பந்து விளையாடினர். இதனை ரசித்த மக்கள், வீரர்களிடம், 'எச்சரிக்கையுடன் கவனமாக விளையாட வேண்டும்' என, அறிவுறுத்தினர்.