ADDED : ஆக 26, 2024 02:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்;பந்தலுார் முனீஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
பந்தலூர் அருகே சேரங்கோடு பகுதியில் ஸ்ரீ சக்தி முனீஸ்வரன், கோவிலில் சிறப்பு பூஜை நேற்று காலை நடந்தது.
அதில், ஊர் பொதுமக்கள் பங்கேற்று சிறப்பு பூஜைகள் செய்ததுடன், கிராமத்தின் நன்மைக்காகவும், பேரிடர்கள் ஏற்படாமல் பொதுமக்களை காப்பாற்றவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
பூஜைகளுக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள் பெரியதம்பி, சுரேஷ், ராஜா உள்ளிட்ட கிராம மக்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் செய்திருந்தனர். சந்திரபோஸ் தலைமையிலான குழுவினர் பூஜைகள் செய்தனர். தொடர்ந்து, ஊர் பொதுமக்கள் சார்பில் கிடா வெட்டி அனைவருக்கும் விருந்து வைக்கப்பட்டது.
-

