அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் வீடு, மருமகன் நிறுவனத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை
அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் வீடு, மருமகன் நிறுவனத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை
UPDATED : நவ 21, 2025 05:13 PM
ADDED : நவ 21, 2025 04:58 PM

திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே, தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகன் பின்னலாடை நிறுவனத்தில் ஜி.எஸ்.டி., நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். மகள் வீட்டிலும் சோதனை நடந்தது.
அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகன் துவாரகநாதன் என்பவருக்கு சொந்தமான பின்னலாடை நிறுவனம் வத்தலகுண்டு அடுத்த, கே.சிங்காரக்கோட்டை அருகே, ஒட்டுப்பட்டியில் உள்ளது. இந்த, பின்னலாடை நிறுவனத்தில் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 8,500 பேர் பணியாற்றி வருகின்றனர். இங்கிருந்து வெளி மாநிலம், வெளிநாடுகளுக்கு பின்னலாடை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இங்கு இன்று(நவ.,21) ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 10 பேர் , இந்த நிறுவனத்தில் சோதனை நடத்தினர்.
திண்டுக்கல்லில் உள்ள ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா வீட்டிலும், ஜி.எஸ்.டி., நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 4 பேர் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

