/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குருசு மலையில் சிறப்பு பிரார்த்தனை
/
குருசு மலையில் சிறப்பு பிரார்த்தனை
ADDED : மார் 29, 2024 10:13 PM

பந்தலுார்;புனித வெள்ளியை முன்னிட்டு சவேரியார் ஆலயத்தில் மக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
கிறிஸ்தவ மக்கள் ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு, 40 நாட்களாக விரதம் இருந்து தினசரி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், ஏசுநாதர் சிலுவையில் அறைந்த நாளான நேற்றைய தினம் துக்க தினமாக அனுஷ்டிக்கின்றனர்.
இதனால், நேற்றைய தினம் புனித வெள்ளி என்று அழைக்கப்படுவதுடன், பங்கு மக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பந்தலூர் புனித சவேரியார் தேவாலயத்தில் அருட்தந்தை பெனடிக் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு, சிலுவை சுமந்து சுமார் மூன்று கி, மீ., துாரம் உள்ள குருசுமலையில் மலை ஏற்றத்தில் ஈடுபட்டனர்.
மலை உச்சியில் உள்ள சிலுவை முன்பாக மீண்டும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு, பின்னர் மலை இறக்கம் நடந்தது. மேலும், மலை ஏற்றத்தில் ஈடுபட முடியாத வயது முதிர்ந்தவர்கள் தேவாலயத்தில் இருந்து, பந்தலுார் கிறிஸ்தவ கல்லறை தோட்டத்திற்கு, 14 குருசடி பிரார்த்தனை செய்துகொண்டு நடந்து சென்றனர்.
அங்கே அருட்சகோதரி டோரின் தலைமையில் சிறப்பு பிரார்த்தனையில் பங்கு மக்கள் ஈடுபட்டனர். மாலை, 3:00 மணிக்கு தேவாலயத்தில் சிலுவை முத்தம் சடங்கும் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பங்கு மக்கள் மட்டும் இன்றி பந்தலுார் சுற்றுவட்டார பகுதி மக்களும் பங்கேற்றனர்.

