நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுார் தேவர்சோலை சாலை மற்றும் மைல் பகுதியில், தெருநாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கூடலுார் தேவர்சோலை சாலை, முதல் மைல் பகுதியில் தெரு நாய்கள் அதிகரித்துள்ளது. இவைகளால் வாகனங்கள் குறிப்பாக இருசக்கர வாகனங்கள் இயக்கவும், காலை, மாலை நேரத்தில் பள்ளி மாணவ மாணவிகள், கூலி பணிக்கு சென்று வரும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.
மக்கள் கூறுகையில், 'இச்சாலை கேரளா வயநாட்டை இணைக்கும் முக்கிய சாலை என்பதால் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். முதல் மைல் பகுதியில் உலா வரும் தெரு நாய்களால், இப்பகுதியினர் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனை தடுக்க வேண்டும்,' என்றனர்.