பழங்குடியினர் கிராமங்களில் வளர்ச்சி பணி குறித்து ஆய்வு
பழங்குடியினர் கிராமங்களில் வளர்ச்சி பணி குறித்து ஆய்வு
ADDED : ஜூன் 19, 2026 05:41 PM
கோத்தகிரி: கோத்தகிரி பழங்குடியினர் கிராமங்களில், 1.48 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
கோத்தகிரி தேனாடு கிராமத்தில், 24.60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழங்குடியினருக்காக கட்டப்பட்டு வரும் தச்சு மற்றும் இரும்பு வேலைக்கான பட்டறை கட்டடம், கரிக்கையூர் கிராமத்தில் தொல்குடி திட்டத்தின் கீழ், ஐந்தினை பசுமை பண்ணை திட்டம் கீழ் , 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறுதானிய தயாரிப்பு மையங்களை கலெக்டர் பார்வையிட்டார்.
தொடர்ந்து, ‘பெண்களின் முன்னேற்றத்திற்காக துணிப்பை தயாரிக்க, 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அலகு, மெட்டுக்கல் கிராமத்தில் மிளகு நற்றுங்கள் உற்பத்தி செய்ய தோட்டக்கலை மற்றும் மழை பயிர்கள் வாயிலாக, 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு வரும் மிளகு நாற்றங்கால் என, மொத்தம், ரூ. 1.48 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் மற்றும் முடிவுற்ற பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
