/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடியிருப்பு பகுதிக்கு நள்ளிரவில் வரும் சிறுத்தை மூன்று இடங்களில் கண்காணிப்பு கேமரா

ADDED : ஆக 17, 2024 12:56 AM

குன்னுார்;குன்னுார் அருகே அருவங்காடு பாலாஜி நகர் சுற்றுப்புற பகுதிகளில் நள்ளிரவில் நாய்களை வேட்டையாடும் சிறுத்தையை கண்காணிக்க வனத்துறை சார்பில் மூன்று இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
குன்னுார் அருகே அருவங்காடு பாலாஜி நகர், ஆரோக்கிய புரம், கிடங்கு உட்பட சுற்றுப்புற பகுதிகளில் சிறுத்தை இரவு நேரத்தில் வந்து செல்கிறது. குடியிருப்பு பகுதிகளில், 6 வளர்ப்பு நாய்கள் மற்றும் இரு பூனைகளை வேட்டையாடி சென்றுள்ளது.
'இந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விடவனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து, முதற்கட்டமாக கட்டப்பெட்டு வனச்சரகர் செல்வகுமார் மேற்பார்வையில், வெலிங்டன் கே.வி., பள்ளி, பாலாஜி நகர் உட்பட மூன்று இடங்களில் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில்,' கேமராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவானால், கூண்டு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.