/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தமிழக எல்லை சோதனைச்சாவடி மேற்கு மண்டல ஐ.ஜி., ஆய்வு
/
தமிழக எல்லை சோதனைச்சாவடி மேற்கு மண்டல ஐ.ஜி., ஆய்வு
தமிழக எல்லை சோதனைச்சாவடி மேற்கு மண்டல ஐ.ஜி., ஆய்வு
தமிழக எல்லை சோதனைச்சாவடி மேற்கு மண்டல ஐ.ஜி., ஆய்வு
ADDED : ஏப் 27, 2024 12:40 AM

பந்தலுார்;தமிழக எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் மேற்கு மண்டல ஐ.ஜி., ஆய்வு செய்தார்.
கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் லோக்சபா தேர்தல் நேற்று நடந்தது. கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் ராகுல் போட்டியிடும் நிலையில், அங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னாள் வந்த நக்சல்கள், 'தேர்தலை புறக்கணிக்க வேண்டும்,' என, தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்களிடம் பேசி கோஷங்கள் எழுப்பினர்.
இதனால், தேர்தல் நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் சூழல் உருவானதால், வயநாடு பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், தமிழக எல்லை சோதனை சாவடிகளில் தலா இரண்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன், வாகன சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக எல்லை சோதனை சாவடிகளான, பாட்டவயல், மதுவந்தால், நம்பியார்குன்னு, கக்குண்டி, பூலக்குண்டு, தாளூர், சோலாடி உள்ளிட்ட சோதனை சாவடிகளில், மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பவானீஸ்வரி நேரில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சோதனை சாவடிகளில் உள்ள வசதிகள் மற்றும் பாதுகாப்பில் ஈடுபடும் போலீசார்கள் குறித்த விபரங்கள் மற்றும் பாதுகாப்பு பணிகள், வாகன சோதனைகள் மேற்கொள்ளப்படும் வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, தேவாலா டி.எஸ்.பி., சரவணன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், சந்திரசேகர் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.

