/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாநில நல்லாசிரியர் விருதுக்கு தமிழாசிரியை தேர்வு!
/
மாநில நல்லாசிரியர் விருதுக்கு தமிழாசிரியை தேர்வு!
ADDED : செப் 04, 2024 12:34 PM

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளியை சேர்ந்த, தமிழாசிரியர் கமலாம்பிகை மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளியை சேர்ந்தவர் கமலாம்பிகை. இவர் கடந்த 1995ல் கொளப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில், இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து 2011ம் ஆண்டு அம்பலவயல் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் பட்டதாரி ஆசிரியராக இடமாறுதலில் சென்றார். தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக இதே பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார்.
இவரின் பணி காலத்தில் பள்ளி வளாகம் சீரமைப்பு, ஹைடெக் லேப், தானியங்கி மின் விளக்கு, காய்கறி தோட்டங்கள் அமைத்தல், கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் மாணவர்களை சாதிக்க வைத்தல், சி.சி.டி.வி. கேமரா என பள்ளி மற்றும் மாணவர்கள் வளர்ச்சிக்கு பணியாற்றி வருவதை பாராட்டி தமிழக அரசு பள்ளி கல்வித்துறை நல்லாசிரியர் விருது வழங்குகிறது.
ஆசிரியருக்கு, சக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.