/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விவசாயிகளுக்கு மானியத்துடன் உதவி கை கொடுத்த தேயிலை வாரியம்
/
விவசாயிகளுக்கு மானியத்துடன் உதவி கை கொடுத்த தேயிலை வாரியம்
விவசாயிகளுக்கு மானியத்துடன் உதவி கை கொடுத்த தேயிலை வாரியம்
விவசாயிகளுக்கு மானியத்துடன் உதவி கை கொடுத்த தேயிலை வாரியம்
ADDED : பிப் 27, 2025 03:20 AM

பந்தலுார்: பந்தலுார் அருகே அய்யன்கொல்லி பகுதியில், தேயிலை வாரியம் சார்பில் விவசாயிகளுக்கு, மானியத்துடன் கூடிய இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தேயிலை வாரிய உறுப்பினர் மனோஜ் குமார் வரவேற்றார். வாரிய செயல் இயக்குனர் முனைவர் முத்துக்குமார் தலைமை வகித்து, தேயிலை வாரியம் மூலம், தொழிலை மேம்படுத்துவதற்கு அரசு மேற்கொள்ளும் திட்டங்கள், விவசாயிகள் பங்களிப்பு குறித்து விளக்கி பேசினார்.
மலநாடு உழவர் உற்பத்தியாளர் சங்கத்தில், உறுப்பினர்களாக உள்ள தேயிலை தொழிலை சார்ந்த விவசாயிகளுக்கு, 20 லட்சத்து 69 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்பினாலான தேயிலை செடிகளை 'புரூனிங்' செய்யும் இயந்திரங்கள், பசுந்தயிலை பறிக்கும் இயந்திரம், களை வெட்டும் இயந்திரம், மருந்து தெளிப்பான் உள்ளிட்ட பல இயந்திரங்கள், 100 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும், 50 சதவீத மானியத்தில், பசுந்தையிலை கொள்முதல் செய்யும் மினி லாரி வழங்கப்பட்டது.
கூடலுார் உதவி இயக்குனர் திவ்யஜோதி தத்தா, அலுவலக வளர்ச்சி அலுவலர் வரன் மேனன், சங்கத்தின் தலைவர் பிரதீஸ், செயலாளர் சுரேஷ் குமார் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.