/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோரிக்கைகள் வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
/
கோரிக்கைகள் வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 15, 2024 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்;கூடலுார் கருவூலம் அருகே, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கூடலுார் வட்டார தலைவர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார். இணைச்செயலாளர் வைரவன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், 'ஆசிரியர், அரசு ஊழியர்களின் மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் வருமானம் வரி பிடித்தம் செய்வதில் காணப்படும் விதிமுறைகளை கைவிட வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது.
மாநில செயலாளர் சுனில்குமார், மாவட்ட தலைவர் செல்வி, வட்டார செயலாளர் சஜி, நிர்வாகிகள் செந்தில்குமார், அன்பழகன், சிவபெருமாள், சலீம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.