ADDED : ஜூலை 23, 2026 06:22 PM
அ நிறம் | அளவு
கூடலுார்: கூடலுார் அரசு கல்லுாரியில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கான நேர்காணல், 29-ல் நடக்கிறது.
கூடலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் (பொ.,) சுபாஷினி வெளியிட்டுள்ள அறிக்கை:
கூடலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தாவரவியல், வணிகத்துறை நிர்வாகவியல், வேதியியல் பாட பிரிவுகளுக்கு தற்காலிக ஆசிரியர்கள் தேவைபடுகின்றனர். மேலும், நுண்ணியல் துறை, தாவரவியல் துறை ஆய்வக உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான நேர்முக தேர்வு, 29ம் தேதி, கோழிப்பாலம் கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது. தகுதி உள்ளவர்கள் நேர்முக தேர்வில் பங்கேற்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
