/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இரவில் விழுந்த மூங்கில் துார்; போக்குவரத்து பாதிப்பு: கூடலுார் சுற்றுப்புற பகுதிகளில் நள்ளிரவில் 'அலர்ட்'

ADDED : ஜூன் 26, 2024 10:30 PM

கூடலுார்: கூடலுார் பகுதியில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சாலையில் விழுந்த மூங்கில் துாரால், இரு மாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கூடலுார், பந்தலுார் பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அன்று இரவு, தேவர்சோலை சாலை, 4வது மைல் பகுதியில் மூங்கில் துார் சாலையில் விழுந்தது. இதே சாலையில், பாடந்துறை நோக்கி சென்ற பைக் மீது மரம், மின்கம்பம் விழுந்து பைக் சேதமடைந்தது. பயணித்த இப்ராகிம்,32, என்பவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பி, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவங்களால், தமிழக - கேரளா - கர்நாடகா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் சாலையின் இரு புறமும் நிறுத்தப்பட்டன. வருவாய் ஆய்வாளர் கல்பனா உட்பட பலர் சம்பவ இடத்துக்கு வந்தனர். தீயணைப்பு வீரர்கள், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் பொக்லைன் உதவியுடன் நள்ளிரவு 11:30 மணிக்கு வந்து சாலையில் இருந்த மரங்கள்; மூங்கில் துாரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால், 12:30 மணிக்கு போக்குவரத்து துவங்கியது. நள்ளிரவில் தொடர்ந்த மழையால், பல பகுதிகளில் மின் சப்ளை துண்டிக்கப்பட்டு மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். அதனை சீரமைக்கும் பணியில் மின்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். நேற்று காலை முதல் சாலை ஓரங்களில் ஆபத்தான மரங்கள்; மூங்கில் துாரை கண்டறிந்து அகற்றும் பணி நடந்து வருகிறது. காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக, தேவாலாவில், 186 மி.மீ., பதிவாகி இருந்தது. மழை தொடரும் என்பதால், கூடலுாரில், 50ம் மேற்பட்ட தற்காலிக முகாம் தயார் நிலையில் உள்ளன.