/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'வெயில் தாக்கம் அதிகம் போதிய குடிநீர் பருகணும்' வழிகாட்டுகிறது மாவட்ட சுகாதார துறை
/
'வெயில் தாக்கம் அதிகம் போதிய குடிநீர் பருகணும்' வழிகாட்டுகிறது மாவட்ட சுகாதார துறை
'வெயில் தாக்கம் அதிகம் போதிய குடிநீர் பருகணும்' வழிகாட்டுகிறது மாவட்ட சுகாதார துறை
'வெயில் தாக்கம் அதிகம் போதிய குடிநீர் பருகணும்' வழிகாட்டுகிறது மாவட்ட சுகாதார துறை
ADDED : ஏப் 27, 2024 12:26 AM
ஊட்டி:'வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க  வேண்டும்,' என, சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.
நீலகிரியில் கடந்த சில ஆண்டுகளாக காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தால்,பருவம் தவறி மழை பெய்வது; பருவமழை சமயத்தில் கடும் வெயிலான காலநிலை நிலவுவது; பனிபொழிவு சமயத்தில் மழை பொழிவு பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களாக நீலகிரியில், கடும் வெயில் தென்படுகிறது.  அதன்படி,காலை, 11:00 மணி முதல் 3:00 மணி வரை ஊட்டியில் அதிகபட்சம், 24, குறைந்தபட்சம், 14; குன்னுாரில் அதிகபட்சம், 27, குறைந்த பட்சம், 18; கூடலுாரி அதிக பட்சம், 30, குறைந்தபட்சம் 18 என வெப்பநிலை பதிவாகியுள்ளது. வெயில் காரணமாக,  தேயிலை தோட்டங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள்  குடையுடன் இலை பறித்து வருகின்றனர்.
மலை காய்கறி தோட்டங்களுக்கு செல்லும் பெண் தொழிலாளர்கள் வெயில் காரணமாக, 12 மணிக்கு மேல், ஒரு மணிநேரம் வேலை செய்வதை தவிர்த்து வருகின்றனர். பொதுமக்கள் அன்றாட பணிகளை காலை நேரங்களில், 12:00 மணிக்கு முன்பாகவும், மதியம், 3:00 மணிக்கு மேல் மேற்கொண்டு வருகின்றனர்.இதற்கிடையே, அடுத்த சில நாட்கள் கடும் வெயில் தென்படும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சுகாதார துறை அறிவுரை
சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறுகையில், ''நீலகிரியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க  வேண்டும். தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, நண்பகல், 12:00 மணி முதல் பிற்பகல், 3:00 மணிவரை வெளியில் செல்ல கூடாது. வெயிலின் தாக்கத்தால் உடல்நலக்குறைவு ஏற்படும் நிலையில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்,'' என்றார்.

