/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆண் சிறுத்தை உயிரிழப்பு வனத்துறையினர் விசாரணை
/
ஆண் சிறுத்தை உயிரிழப்பு வனத்துறையினர் விசாரணை
ADDED : ஆக 12, 2024 02:15 AM

கூடலுார்;முதுமலை மசினகுடி வனப்பகுதியில் ஆண் சிறுத்தை உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டம் மசினகுடி வனச்சரகம் ஆவரல்ல வனப்பகுதியில், நேற்று முன்தினம் வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வனப்பகுதியில், சிறுத்தை இறந்து கிடந்தது தெரிய வந்தது. வன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
மசினகுடி துணை இயக்குனர் அருண்குமார், வனச்சரகர் பாலாஜி உடலை ஆய்வு செய்தனர். முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.
வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த ஆண் சிறுத்தைக்கு, 10 வயது இருக்கும். வயது முதிர்வு மற்றும் மற்றொரு சிறுத்தையுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. ஆய்வக பரிசோதனைக்காக உடல் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது,' என்றனர்.