/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மீண்டும் வந்தான் 'கொம்பன்' ; உள்ளூர் மக்கள் அச்சம்
/
மீண்டும் வந்தான் 'கொம்பன்' ; உள்ளூர் மக்கள் அச்சம்
மீண்டும் வந்தான் 'கொம்பன்' ; உள்ளூர் மக்கள் அச்சம்
மீண்டும் வந்தான் 'கொம்பன்' ; உள்ளூர் மக்கள் அச்சம்
ADDED : மார் 04, 2025 11:18 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே நெலாக்கோட்டை பகுதிக்கு கொம்பன் யானை மீண்டும் வந்ததால், மக்கள் உறக்கம் இழந்தனர்.
பந்தலுார் அருகே, முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய, நெலாக்கோட்டை விலங்கூர் குடியிருப்புகளை ஒட்டிய வனத்தில் முகாமிட்டிருந்த கொம்பன் யானை, நீண்ட இடைவெளிக்கு பின்னர், மீண்டும் நெலாக்கோட்டை பஜார் பகுதிக்கு வந்தது. அங்கு குடியிருப்புகளை ஒட்டிய பகுதிகளுக்கு வந்த யானை, வீடுகள் முன்பாக நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்களை தாக்கி சேதப்படுத்தியது.
மேலும், யானையை துரத்த முயன்ற வனக்காவலர்கள் மற்றும் பொதுமக்களை ஆக்ரோஷத்துடன் துரத்தியதால், மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த யானை பகல் நேரத்தில் குடியிருப்புகளை ஒட்டிய புதர் பகுதியில் படுத்து உறங்கியது. பிதர்காடு வனத்துறையினர், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் கூறுகையில்,'நேற்று முன்தினம் அந்த வழியாக வந்த கார் முன்பகுதியில் தந்ததால் குத்தி தாக்கியதுடன், அங்கிருந்து அருகிலுள்ள தேயிலை தோட்டத்திற்கு சென்றுள்ளது.
யானையால், கேரளாவில் இருந்து முதுமலை மற்றும் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், தற்போது நோன்பு காலம் என்பதால் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பள்ளிவாசல் செல்வதற்கும் இஸ்லாமிய மக்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே, இந்த யானையால் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் முன்பாக, முதுமலை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.