/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மின்கம்பிகளை மாற்றி அமைக்க ஊராட்சி நிர்வாகம் கோரிக்கை
/
மின்கம்பிகளை மாற்றி அமைக்க ஊராட்சி நிர்வாகம் கோரிக்கை
மின்கம்பிகளை மாற்றி அமைக்க ஊராட்சி நிர்வாகம் கோரிக்கை
மின்கம்பிகளை மாற்றி அமைக்க ஊராட்சி நிர்வாகம் கோரிக்கை
ADDED : ஜூலை 05, 2024 01:57 AM

மேட்டுப்பாளையம்;காரமடை ஊராட்சி ஒன்றியம், ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட, எம்.ஜி.ஆர்., நகர் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இங்கு, 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஊரின் மையப்பகுதியில் பல குடியிருப்புகளுக்கு மேல் பகுதியில், மின்சார கம்பிகள் செல்கின்றன.
காற்று வேகமாக வீசும் போது, மின்சார கம்பிகள் ஒன்றோடு ஒன்று உராயும் போது, தீப்பொறி ஏற்படுகிறது. இதனால் மின்கம்பிகள் அறுந்து கீழே விழுவதற்கு வாய்ப்புள்ளது.
அறுந்து கீழே விழும் மின்கம்பிகளால், மனித உயிர்களுக்கும், கால்நடைகளுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து பலமுறை மின்சார வாரியத்துக்கு, ஊராட்சியின் சார்பில் தகவல் தெரிவித்தும், மின் கம்பிகளை மாற்றி அமைக்கவில்லை. எனவே குடியிருப்புகளின் மேல் புறத்தில் செல்லும் மின் கம்பிகளை, சாலையின் ஓரத்தில் மாற்றி அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவர் பழனிசாமி கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.