/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காலியாக உள்ள நகராட்சி கமிஷனர் பணியிடம் கூடலுார் மக்கள் கடும் அதிருப்தி

ADDED : ஆக 09, 2024 01:35 AM
கூடலுார்:கூடலுார் நகராட்சியில் ஆறு மாதமாக கமிஷனர் பணியிடம் காலியாக உள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கூடலுார் நகராட்சி கமிஷனராக பிரான்சிஸ் சேவியர் பணியாற்றி வந்தார். லோக்சபா தேர்தலின் போது அவர் மாற்றப்பட்டார். ஊட்டி நகராட்சி கமிஷனர், கூடலுார் நகராட்சி கமிஷனர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். தற்போது, நெல்லியாளம் நகராட்சி கமிஷனர், கூடலுார் நகராட்சி கமிஷனர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார்.
கூடலூர் நகராட்சியில் ஆறு மாதமாக நிரந்தர கமிஷனர் இல்லாததால், அலுவலகம் சார்ந்த பல்வேறு பணிகள் தாமதம் ஏற்படுவதால், மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த, 30ம் தேதி நடந்த மன்ற கூட்டத்தில், அலுவலக பணி உள்ளிட்ட காரணங்களால், நகராட்சி (பொ.,) கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்வில்லை; கவுன்சிலர்கள் அதிருப்தி அடைந்தனர்.
கவுன்சிலர்கள் கூறுகையில், 'கூடலுார் நகராட்சியில் பல்வேறு பிரச்னைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டியுள்ளது. நிரந்தர கமிஷனர் இல்லாததால், பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே, கூடலுார் நகராட்சிக்கு நிரந்தர கமிஷனர் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.