/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
2 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்க திட்டம்; பா.ஜ., வடக்கு மாவட்ட கூட்டத்தில் முடிவு
/
2 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்க திட்டம்; பா.ஜ., வடக்கு மாவட்ட கூட்டத்தில் முடிவு
2 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்க திட்டம்; பா.ஜ., வடக்கு மாவட்ட கூட்டத்தில் முடிவு
2 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்க திட்டம்; பா.ஜ., வடக்கு மாவட்ட கூட்டத்தில் முடிவு
ADDED : ஆக 26, 2024 12:48 AM

அன்னுார்:'கோவை வடக்கு மாவட்டத்தில், 2 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும்,' என பா.ஜ., கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
மேட்டுப்பாளையம், அவிநாசி, சூலூர் ஆகிய மூன்று தொகுதிகள் அடங்கிய, கோவை வடக்கு மாவட்ட அளவிலான உறுப்பினர் சேர்க்கை விழிப்புணர்வு கூட்டம் எல்லப்பாளையத்தில் நடந்தது.
கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சங்கீதா பேசுகையில்,கோவை வடக்கு மாவட்டத்தில், 2 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் சேர்க்க வேண்டும், என்றார்.
பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினரும், உறுப்பினர் சேர்ப்பு மாவட்ட பொறுப்பாளருமான பாயிண்ட் மணி பேசியதாவது: தமிழகத்தில் 1.50 கோடி உறுப்பினர்கள் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிர்வாகிகள் வீடு, வீடாகச் சென்று, உறுப்பினர் சேர்க்க வேண்டும். 88000 02024 என்னும் மொபைல் எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் வரும் லிங்கில் விவரங்களை பதிவு செய்து உறுப்பினராகலாம். உறுப்பினர் அட்டையை எஸ்.எம்.எஸ்., இல் பெறலாம். தங்கள் போனில் போட்டோ இருந்தால் அதையும் பதிவேற்றம் செய்யலாம்.
உறுப்பினரான பிறகு பா.ஜ.,வின் உறுப்பினர் சேர்ப்பு இணையதள லிங்கில் கூடுதல் தகவலை பதிவேற்றம் செய்யலாம். தமிழகத்தில் ஒரு ஓட்டு சாவடிக்கு 200 பேர் சேர்க்க வேண்டும். வலைதளம், நமோ ஆப், கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்தல், படிவம் எழுதிக் கொடுத்தல் என நான்கு வழிகளில் உறுப்பினர் சேர்க்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், மாவட்ட பொதுச் செயலாளர்கள் சத்தியமூர்த்தி, நந்தகுமார், மாவட்ட பொருளாளர் பிரபு உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.