ADDED : ஜூன் 26, 2024 09:25 PM

கூடலுார்: கூடலுார் தொரப்பள்ளி இருவயல் குடியிருப்பு பகுதிக்குள் மழை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
கூடலுாரில் தொடரும் மழையால், ஆறுகள் மற்றும் நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம், இரவு பெய்த மழையில், இங்குள்ள ஆறுகளில் மழை வெள்ளம் ஏற்பட்டது.
தொரப்பள்ளி குனில் வழியாக செல்லும், தொரப்பள்ளி ஆற்றில் ஏற்பட்ட மழை வெள்ளம், நேற்று அதிகாலை, இருவயல் கிராம குடியிருப்பை சூழ்ந்தது.
சில வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது. மக்கள் வெளியே வர முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். வி.ஏ.ஓ., நாசர் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். மழை குறைந்தது தொடர்ந்து மழை வெள்ளம் வெளியேறியது. மக்கள் நிம்மதி அடைந்தனர்.
மக்கள் கூறுகையில், 'ஆண்டுதோறும் பருவமழையின் போது, கிராமத்துக்குள் மழைநீர் நுழைவது வாடிக்கையாக உள்ளது.
இதனால் பருவமழையின் போது அடிக்கடி சிரமங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, குடியிருப்பு பகுதிக்குள் மழை வெள்ளம் நுழைவதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.