/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ராகுலை பாா்க்க வந்த எம்.எல்.ஏ.,க்கள் விட மறுத்த பாதுகாப்பு அதிகாரிகள்
/
ராகுலை பாா்க்க வந்த எம்.எல்.ஏ.,க்கள் விட மறுத்த பாதுகாப்பு அதிகாரிகள்
ராகுலை பாா்க்க வந்த எம்.எல்.ஏ.,க்கள் விட மறுத்த பாதுகாப்பு அதிகாரிகள்
ராகுலை பாா்க்க வந்த எம்.எல்.ஏ.,க்கள் விட மறுத்த பாதுகாப்பு அதிகாரிகள்
ADDED : ஏப் 16, 2024 12:44 AM

பந்தலுார்;பந்தலுார் பகுதிக்கு வந்த ராகுலை சந்திக்க, வயநாடு எம்.எல்.ஏ.,க்களை விட அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பந்தலுார் அருகே தமிழக எல்லையான தாளூர் பகுதிக்கு காங்., எம்.பி. ராகுல் நேற்று காலை வருகை தந்தார். அவர் மைசூருவில் இருந்து ஹெலிகாப்டரில் வந்த நிலையில், அவரை வரவேற்க காங்., கட்சி நிர்வாகிகள் மைதானத்தில் இருந்தனர்.
அதில், தமிழக நிர்வாகிகளை பரிசோதனை செய்த போலீசார் மைதானத்தின் முன்பாக நிறுத்தியிருந்தனர்.
அப்போது, வயநாடு தொகுதி எம்.எல்.ஏ., க்கள் பாலகிருஷ்ணன் மற்றும் சித்திக் ஆகியோர் ராகுலை வரவேற்க வந்தனர். பாதுகாப்பு அதிகாரிகள் அவர்கள் இருவரையும் விட மறுத்ததுடன், 'நீங்கள் எம்.எல்.ஏ.க்கள் என்பது எப்படி நான் ஏற்றுக்கொள்வது,' என, தெரிவித்தனர்.
இதனால், கட்சியினர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, காங்., மூத்த தலைவர் தங்கபாலு சம்பவ இடத்துக்கு சென்று பாதுகாப்பு அதிகாரிகளிடம் பேசி, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி எம்.எல்.ஏ.க்கள் இருவரையும் அழைத்து வந்தார்.
'பாதுகாப்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, போலீஸ் உயர் அதிகாரியிடம் புகார் அளிக்கப்படும்,' என, காங்., எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்தனர். இதனால், ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

