/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலையில் மண்டையை 'பொளந்த' வெயில்...! இரண்டு மணி நேரம் ஓட்டுப்பதிவு மந்தம்

ADDED : ஏப் 19, 2024 10:56 PM
ஊட்டி;மலை மாவட்டத்தில் மண்டையை 'பொளந்த' வெயிலால் இரண்டு மணி நேரம் ஓட்டுப்பதிவு மந்தமாக நடந்தது.
லோக்சபாவில் மலை மாவட்டத்தில் ஊட்டி, குன்னுார், கூடலுார் ஆகிய மூன்று தொகுதிகள் உள்ளன.
இங்கு, 5.73 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். நேற்று, லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது. காலை, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.
நண்பகல், 12:00 மணி வரை, விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடந்தது. சமீப காலமாக காலநிலை மாற்றத்தின் எதிரொலியாக, நேற்று, ஊட்டியில் அதிகபட்சம், 24, குறைந்தபட்சம், 14; குன்னுார் அதிகபட்சம், 27, குறைந்த பட்சம், 18; கூடலுார், அதிகபட்சம், 30, குறைந்த பட்சம், 18 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலை நிலவியது. சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஓட்டு போட குறைந்தளவிலான வாக்காளர்கள் வந்ததால், நண்பகல், 12:00 மணி முதல், 2:00 மணி வரை ஓட்டுப்பதிவு மந்தமாக நடந்தது.
தொடர்ந்து, மாலை, 2:00 மணிக்கு மேல் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. வெயில் அதிகரித்த காரணத்தினால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஓட்டு சாவடி மையங்களில், சாமியான போடப்பட்டு, குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டது. முதலுதவி சிகிச்சைக்கு சுகாதார துறை செவிலியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.