/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமடைந்த அகழியை சீரமைக்கும் பணி: காட்டு யானைகள் கிராமத்துக்கு வராமல் இருக்க நடவடிக்கை

ADDED : மே 10, 2024 01:43 AM

கூடலுார்;கூடலுார், தொரப்பள்ளி, முதுமலை வனத்தை ஒட்டி சேதடைந்த அகழியை சீரமைக்கும் பணி வனத்துறையினர் துவங்கியுள்ளனர்.
முதுமலை புலிகள் காப்பகம் கார்குடி வனச்சரகம், கூடலுாரை ஒட்டி அமைந்துள்ளது.
இதன் அருகே உள்ள, தொரப்பள்ளி, குணில், அள்ளுர்வயல் உள்ளிட்ட கிராம பகுதிகளில், இரவு நேரங்களில் நுழையும் காட்டு யானைகள் விவசாய பயிர்கள், வீடுகளை சேதப்படுத்தி வருகிறது.
இதனை தடுக்க வனத்துறை சார்பில், முதுமலை வனத்தை ஒட்டி, அகழி அமைத்து கண்காணிப்பு பணி நடக்கிறது.
எனினும், சில யானைகள் அகழியை கடந்து, இரவில் ஊருக்குள் நுழைந்து காலை நேரத்தில் தொரப்பள்ளி வன சோதனை சாவடி வழியாக, முதுமலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன.
இதனால் மக்கள் இரவு நேரங்களில் அத்தியாவசிய தேவைக்காக கூட வெளியில் வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, கிராம மக்கள் வன சோதனை சாவடி அருகே போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
தொடர்ந்து, வனத்துறையினர், 'அகழியை ஆய்வு செய்து, சேதமடைந்த பகுதிகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என, தெரிவித்தனர். அதனை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்.
தொடர்ந்து, கார்குடி வனத்துறை சார்பில், சேதமடைந்த அகழியை, பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைக்கும் பணி துவக்கப்பட்டது. இதனை வரவேற்றுள்ள மக்கள் கூறுகையில், 'சேதம் அடைந்த அகழியை சீரமைப்புடன், அகழி மீண்டும் சேதமடையாமல் தொடர்ந்து பராமரிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.