/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'தி.மு.க.,வுக்கு ஓட்டுபோட்டால் பிரயோஜனம் இல்லை'
/
'தி.மு.க.,வுக்கு ஓட்டுபோட்டால் பிரயோஜனம் இல்லை'
ADDED : ஏப் 05, 2024 01:02 AM

ஊட்டி;''தி.மு.க., வேட்பாளர்ராஜாவுக்கு, ஓட்டு போட்டால் பிரயோஜனம் இல்லை்,'' என, அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி கூறினார்.
நீலகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ் செல்வனை ஆதரித்து அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி, ஊட்டி ஏ.டி.சி.,யில் பிரசாரம் செய்து பேசியதாவது:
இந்த தொகுதியில், நம்மை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் ராஜா, பெரும் ஊழல் வாதி. அவருக்கு ஓட்டு போட்டு பிரியோஜனம் இல்லை. மத்தியில் அமைச்சராக இருந்த போது 1.76 லட்சம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்துள்ளார்.
நாட்டிலேயே தி.மு.க., தான் ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு. தற்போது 2 ஜி வழக்கு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டுக்கு விசாரணைக்கு வந்துள்ளது. 'ராஜா இங்கே இருப்பாரா அங்கே இருப்பாரா,' என்பது விரைவில் தெரியும்.
அ.தி.மு.க., ஆட்சி மலரும்
நம் மாநிலத்தில் அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் மலரும். முன்னாள் முதல்வர் ஜெ., இருந்த போது மலை மாவட்ட மக்களுடன் எப்படி இருந்தார்களோ, அதே போல், நானும் இருந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவேன்.
நாங்கள் ஆட்சியில் இருந்த போது, அரசு மருத்துவ கல்லுாரி கொண்டு வந்ததால், உயரிய சிகிச்சையை இம்மாவட்ட மக்கள் பெற்று வருகின்றனர்.
அந்த திட்டத்தில் தற்போதைய முதல்வர் ஸடாலின் தி.மு.க., 'ஸ்டிக்கர் ஒட்டி, அவர் கொண்டு வந்தாக கூறுகின்றனர்.
நாம் பெற்ற பிள்ளைக்கு, அவர் பெயர் வைத்து வருகிறார். ஊட்டி மார்க்கெட்டில் பல மடங்கு வாடகை உயர்த்தியதால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.
லோக்சபா தேர்தலில் நமது வேட்பாளர் வெற்றி பெற்று வரும்போது, மத்திய அரசிடமிருந்த பல்வேறு திட்டங்களை பெற்று தந்து சிறந்த சுற்றுலா தலமாக ஊட்டியை மாற்றுவோம்.
இவ்வாறு, பழனிசாமி பேசினார்.
மாஜி., அமைச்சர் எஸ்.பி., வேலுமணி, மாவட்ட செயலாளர் வினோத் உட்பட பலர் பங்கேற்றனர்.

