/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
திருக்குறள் பேச்சுப் போட்டி; அரசு பள்ளி முதலிடம்
/
திருக்குறள் பேச்சுப் போட்டி; அரசு பள்ளி முதலிடம்
ADDED : ஆக 06, 2024 05:57 AM
மேட்டுப்பாளையம்: கோவையில் நடந்த திருக்குறள் பேச்சுப் போட்டியில், மூலத்துறை அரசு பள்ளியும், சச்சிதானந்த பள்ளியும் முதலிடம் பெற்றன.
ஸ்ரீராம் இலக்கிய கழகம், திருக்குறள் பேச்சுப் போட்டியை நடத்துகிறது.கோவை சபர்பன் மேல்நிலைப் பள்ளியில் மண்டல அளவிலான பேச்சுப்போட்டி நடந்தது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 140 மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், 6, 7 மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் இடையே இடைநிலை பிரிவில் நடந்த போட்டியில், சிறுமுகையை அடுத்த மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவன் சுதர்சன் முதலிடம் பெற்றுள்ளார்.
இவர் மாநில அளவில் சென்னையில் அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெறும் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
இந்த மாணவனையும், வழிகாட்டியாக இருந்த ஆசிரியர் திருமுருகனையும், பள்ளி தலைமை ஆசிரியை பத்திரம்மாள், சக ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.
கோவையில் நடந்த திருக்குறள் பேச்சுப் போட்டியில், மேல்நிலைப் பிரிவில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியை சேர்ந்த, பதினொன்றாம் வகுப்பு மாணவி லக் ஷனா முதலிடம் பெற்றார். இடைநிலை பிரிவில் இதே பள்ளியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர் அகில் இரண்டாம் இடம் பெற்றார்.
இருவரும் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கு பெற தேர்வு பெற்றனர். மாணவர் தீபக் சூர்யா ஊக்கப்பரிசு பெற்றார்.
சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளி, 6 வது முறையாக மாநில அளவிலான இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அத்துடன் இப்பள்ளி மாணவ, மாணவியர் ஐந்து முறை, மாநில அளவில் முதல் பரிசு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முதலிடம் பெற்ற மாணவி லக் ஷனாவை, பள்ளி நிர்வாக அறங்காவலர் ராமசாமி, பள்ளி செயலர் கவிதாசன், பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.