/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொட்டபெட்டா நுழைவு கட்டண மைய இறுதிக்கட்ட பணி
/
தொட்டபெட்டா நுழைவு கட்டண மைய இறுதிக்கட்ட பணி
ADDED : செப் 03, 2024 02:15 AM

ஊட்டி:ஊட்டி தொட்டபெட்டா நுழைவு கட்டண மையத்தில் இறுதிக்கட்ட பணி நடந்து வருகிறது.
ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா சிகரத்தை காண தவறுவதில்லை. இதனால், பார்வையாளர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள், கடந்த காலங்களில், தொட்டபெட்டா ஜங்ஷன் அருகே, வாகனத்திற்கான நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
இதனால், நுாற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்து நிற்க வேண்டிய நிலை இருந்தது. தவிர, ஊட்டி, கோத்தகிரி, தும்மனட்டி மற்றும் கெந்தொரை வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள் உட்பட தனியார் வாகனங்கள் நெரிசலில் சிக்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனை தவிர்க்க, நுழைவு கட்டண வசூல் மையத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்காக, சில நாட்கள் சுற்றுலா வாகனங்கள் தொட்டபெட்டா சிகரத்துக்கு செல்ல தடைவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது, பணிகள் ஓரளவு நிறைவடைந்து, வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது, அங்கு இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.
சுற்றுலா பயணிகள் கூறுகையில்,' இப்பணிகளை விரைந்து முடித்து, இரண்டாம் சீசனில் தடையில்லாமல் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும்,' என்றனர்.