/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முத்துப்பல்லக்கு உற்சவம் கோலாகலம் :பல்லாயிர கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

ADDED : மே 03, 2024 11:25 PM

குன்னுார்:குன்னுாரில், 79வது ஆண்டு முத்துப்பல்லக்கு உற்சவம் நடந்தது.
குன்னுார் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியில் ஒன்றான முத்துப்பல்லக்கு ஊர்வலம் நேற்று நடந்தது.
குன்னுார் வி.பி., தெரு சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து அபிஷேக பொருட்கள் கொண்ட தாலம் ஏந்திய மகளிர் ஊர்வலமாக மாரியம்மன் கோவிலை அடைந்தனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
மாலை நடந்த முத்துபல்லக்கு ஊர்வலத்தில், பஞ்சவாத்தியம், சிங்காரி, பஞ்சாரி மேளம் முழங்க, கதகளி, பூக்காவடி ஆட்டம் மற்றும் முத்துகாளைகள் அணிவகுக்க அம்மன் பவனி வந்தார். கிருஷ்ணர், ராதை, வேடமணிந்த கேரள குழுவினர் நடனம் இடம் பெற்றது.
25 அடி உயரம் கொண்ட கும்பகர்ணன் அலங்கார வடிவமைப்பு காட்சிப்படுத்தப்பட்டது. இசை கச்சேரி, வாண வேடிக்கை அனைவரையும் கவர்ந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.