/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி படகு இல்ல ஏரியில் மூன்று அடி தண்ணீர் குறைப்பு
/
ஊட்டி படகு இல்ல ஏரியில் மூன்று அடி தண்ணீர் குறைப்பு
ஊட்டி படகு இல்ல ஏரியில் மூன்று அடி தண்ணீர் குறைப்பு
ஊட்டி படகு இல்ல ஏரியில் மூன்று அடி தண்ணீர் குறைப்பு
ADDED : பிப் 27, 2025 10:02 PM
ஊட்டி; ஊட்டி படகு இல்ல ஏரியில், 3 அடிவரை தண்ணீர் குறைக்கப்பட்டு துார் வாரும் பணி நடந்து வருகிறது.
ஊட்டியில் முக்கிய சுற்றுலா தலமாக படகு இல்லம் திகழ்கிறது. இங்குள்ள ஏரியில் மண்,சகதி அதிகரித்துள்ளதால், படகு சவாரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. சுற்றுலா வளர்ச்சி கழகம் கட்டுப்பாட்டில் இந்த ஏரி இருப்பதால் துார்வார திட்டமிடப்பட்டது.
இதற்காக, சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 7.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. சமீபத்தில் துார் வாரும் பணியை தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார். துார்வாரும் பணிகள் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதில், ஊட்டி படகு இல்லை ஏரி, கோடப்பமந்து கால்வாய் முழுவதுமாக துாரவார திட்டமிடப்பட்டுள்ளது. 3.5 கி.மீ., நீளமுள்ள கோடப்பமந்து பிரதான கால்வாயில் ஆங்காங்கே தேங்கியுள்ள சகதி, செடிகளை அகற்றும் பணி நடக்கிறது.
அதிகாரிகள் கூறுகையில்,'ஊட்டி படகு இல்லம் ஏரியின் கொள்ளளவு குறைந்துள்ளது. இதனால், துார்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது பணிகள் நடந்து வருகிறது. இப்பணி 'டிரேட்ஜிங்' எனப்படும் நவீன தொழில்நுட்பத்தில் நடந்து வருகிறது.
ஏரியின் குறிப்பிட்ட பகுதியில் பணி நடப்பதால், தற்போது, 3 கன அடிவரை தண்ணீர் குறைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. கோடை சீசனுக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது,' என்றனர்.