/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மும்முனை மின்சாரம் 'கட்' கருகும் பயிர்கள்
/
மும்முனை மின்சாரம் 'கட்' கருகும் பயிர்கள்
ADDED : ஏப் 24, 2024 09:58 PM
அன்னூர் : மும்முனை மின்சாரம் வினியோகம் குறைந்ததால், அன்னூர் வடக்கு பகுதியில் பயிர்கள் காய்கின்றன.
அன்னூர் வட்டாரத்தில், வாழை, கரும்பு, சோளம், பருத்தி மற்றும் காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது. பல மாதங்களாக மழை இல்லாததால், ஆழ்குழாய் கிணற்று நீரையே விவசாயிகள் நம்பி உள்ளனர்.
ஆழ்துளை கிணறுகளில் இருந்து மும்முனை மின்சாரத்தை பயன்படுத்தி பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். தற்போது கடும் வறட்சி நிலவுவதால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்று விட்டது.
பல மணி நேரம் மின் மோட்டார் இயங்கினால் மட்டுமே, வயலுக்கு ஓரளவு தண்ணீர் பாய்ச்ச முடிகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக மும்முனை மின்சார விநியோகம் கடுமையாக குறைந்து விட்டது.
இதுகுறித்து வடக்கலூர் விவசாயிகள்கூறுகையில், 'வடக்கலூர், மூக்கனூர், செங்கப்பள்ளி, லக்கேபாளையம் பகுதியில் மும்முனை மின்சார சப்ளை மிகவும் குறைந்து விட்டது. குறிப்பாக இரவு நேரத்தில் ஓரிரு மணி நேரம் மட்டுமே சப்ளையாகிறது.
இதனால் தண்ணீர் இன்றி பயிர்கள் காய்கின்றன. மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

