/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முதுமலை வனக்காப்பகத்தில் தொடர்கிறது புலிகள் இறப்பு
/
முதுமலை வனக்காப்பகத்தில் தொடர்கிறது புலிகள் இறப்பு
முதுமலை வனக்காப்பகத்தில் தொடர்கிறது புலிகள் இறப்பு
முதுமலை வனக்காப்பகத்தில் தொடர்கிறது புலிகள் இறப்பு
ADDED : மார் 07, 2025 01:51 AM

பந்தலுார்:நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட விலங்கூர் அருகே எடக்கோடு என்ற இடத்தில் நேற்று, 10 வயது ஆண் புலி இறந்து கிடந்தது.
புலிகள் காப்பக இணை இயக்குநர் வித்யா, கால்நடை டாக்டர்கள் ராஜேஷ் குமார், வன சரகர் கணேசன் தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். பிரேத பரிசோதனை நடந்தது.
உடல் பாகங்கள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டு, நகம்; பல் உட்பட பிற உடல் உறுப்புகள் அப்பகுதியில் எரிக்கப்பட்டன.
புலிகள் காப்பக கள இயக்குனர் கிருபா சங்கர் கூறுகையில், ''நடப்பாண்டில் இதுவரை நெலாக்கோட்டை வனசரகத்தில் மூன்று புலிகள் இறந்து உள்ளன.
''இவை இறப்புக்கு வேறு காரணங்கள் ஏதும் இல்லை. எனினும், ஒரே சரக பகுதியில், மூன்று புலிகள் இறந்ததால், இதற்கான சிறப்பு ஆய்வு நடந்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
நீலகிரியில் 2023, ஆக., செப்., மாதங்களில் மட்டும், 6 குட்டி உட்பட 10 புலிகள் உயிரிழந்தன.
அதில், இரு புலிகள் நீலகிரி கோட்டத்தில் விஷம் வைத்து கொல்லப்பட்டன. அப்போது, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய குழு ஆய்வு நடத்தியது.
கடந்த ஆண்டு, மாவட்டத்தில், மொத்தம், 6 புலிகள் இறந்துள்ளன. அதில், மூன்று புலிகள் இயற்கை மரணம்.
இரண்டு புலிகள் பிதர்காடு தனியார் எஸ்டேட் பகுதியில் பன்றிக்கு வைத்த விஷத்தில் பலியாகின. அதில், வட மாநிலத்தை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
கூடலுாரில் சுருக்கு வைத்து ஒரு புலி பலியானது. இது தொடர்பாக, உள்ளூர் நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். நடப்பாண்டில் இதுவரை மூன்று புலிகள் இறந்துள்ளன.