/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காலத்துக்கு ஏற்ற உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
காலத்துக்கு ஏற்ற உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : மே 15, 2024 12:11 AM
பந்தலுார்;பந்தலுாரில் செயல்படும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில், கோடை மற்றும் மழை காலங்களில் உட்கொள்ள வேண்டிய உணவு வகைகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறையில் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அதில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசுகையில், ''கோடை வெயில் சுட்டெரிக்கும் காலங்களில் உடலில் நீர் சத்து குறைந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். அதனை சரிபடுத்தும் வகையில் அடிக்கடி தண்ணீர் மற்றும் பழரசங்கள் குடிப்பது, தேவையில்லாமல் வெயிலில் சுற்றி திரிவதை தவிர்க்க வேண்டும்.
உடல் சோர்வு ஏற்பட்டால் உப்பு கரைசலை எடுத்துக் கொள்வது போன்றவை முக்கியமாகும். அதேபோல், கருமை நிறம் கலந்த உடைகள் மாறாக வெளிர் நிற ஆடைகளை அணிந்தால் உடலில் வெப்பத்தின் தாக்கம் குறையும், இத்தகைய உணவுமுறையை மழைகாலத்தில் மாற்றி கொள்ள வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து பழங்குடியின கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு அனைவருக்கும் பழ வகைகள் வழங்கப்பட்டது.

