/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தோப்புக்கரணமே முதல் யோகாசனம்; ஆன்மிக பேச்சாளர் விளக்கம்
/
தோப்புக்கரணமே முதல் யோகாசனம்; ஆன்மிக பேச்சாளர் விளக்கம்
தோப்புக்கரணமே முதல் யோகாசனம்; ஆன்மிக பேச்சாளர் விளக்கம்
தோப்புக்கரணமே முதல் யோகாசனம்; ஆன்மிக பேச்சாளர் விளக்கம்
ADDED : மே 28, 2024 10:42 PM

பெ.நா.பாளையம்:'விநாயகர் கோவிலில் நாம் போடும் தோப்புக்கரணமே முதல் யோகாசனம்' என, ஆன்மிக பேச்சாளர் விவேகானந்தன் பேசினார்.
பெரியநாயக்கன்பாளையம் ராஜகணபதி கோவில், 20ம் ஆண்டு விழாவை ஒட்டி, 'நமது கலாசாரம் காப்போம்' என்ற தலைப்பில், ஆன்மிக பேச்சாளர் விவேகானந்தன் பேசியதாவது:
மனித வாழ்வின் முக்கியமான செல்வம், உடல் ஆரோக்கியம். கடவுள்தான் மிகப்பெரிய மருத்துவர். நம் உடல் எவ்வாறு இயங்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்து, அவர் தான் இயக்குகிறார். உணவை நின்று கொண்டு, 'டிவி' பார்த்துக் கொண்டு, உண்ணாமல் அமர்ந்து, பொறுமையாக உண்ண வேண்டும். தினமும் அதிகாலை துாக்கத்தில் இருந்து எழுந்துவிட வேண்டும். அதிகாலை புறப்படும் பறவை தான், நீண்ட துாரம் பயணிக்கிறது. நம் பெண் குழந்தைகளுக்கு கோலம் போடும் பயிற்சியை நாம் கற்றுத் தர வேண்டும். அது உடல் நரம்புகளுக்கு ஆரோக்கியம் தரும்.
அரிசி கோலம் எறும்புகளுக்கு உணவாகிறது. வீடு தேடி வரும் தீய சக்தியை தடுக்கும் சக்தி கோலங்களுக்கு உண்டு. வாசல்களில் தெளிக்கும் சாணம் சிறந்த கிருமி நாசினி.
விநாயகர் கோவிலில் தோப்புக்கரணம் போடுகின்றோம். உலகில் முதல் யோகாசனமே தோப்புக்கரணம்தான். பணம், பதவி, புகழ் ஆகியவை நிலைத்திருக்கக் கூடியது அல்ல. இறைவன் திருவடியே நிலைத்து நிற்கக் கூடியது. கோவில்களுக்கு பாதயாத்திரை செல்வதால் உடல் ஆரோக்கியம் பெறும்.
இவ்வாறு, விவேகானந்தன் பேசினார்.