/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மேக மூட்டத்தில் 'ஜிப் லைன்' சாகச சுற்றுலா சுற்றுலா பயணிகள் ஆர்வம்
/
மேக மூட்டத்தில் 'ஜிப் லைன்' சாகச சுற்றுலா சுற்றுலா பயணிகள் ஆர்வம்
மேக மூட்டத்தில் 'ஜிப் லைன்' சாகச சுற்றுலா சுற்றுலா பயணிகள் ஆர்வம்
மேக மூட்டத்தில் 'ஜிப் லைன்' சாகச சுற்றுலா சுற்றுலா பயணிகள் ஆர்வம்
ADDED : ஆக 24, 2024 02:08 AM

கூடலுார்;கூடலுார் நாடுகாணி ஜீன்பூல் தாவர மையத்தில், மேக மூட்டம் இடையே, 'ஜிப் லைன்' சாகச சுற்றுலா செல்வதில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கூடலுார், நாடுகாணி, ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்தில், தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான பசுமை திட்டத்தின் கீழ், 1.7 கோடி ரூபாய் நிதியில் உள் கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, தொங்கியப்படி சாகச சுற்றுலா செல்ல அமைத்துள்ள, 'ஜிப் லைன் ஹேங்கிங்' சாகச சுற்றுலா, சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
தற்போது, பருவ மழையுடன் அடிக்கடி படர்ந்து வரும் மேக மூட்டமும், மிதமான காலநிலையும் நிலவி வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள், மேக மூட்டத்தின் போது, ஜிப் லைனில், தொங்கியபடி சாகச சுற்றுலா செல்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், 'மிதமான காலநிலையுடன், தொடர் மேகமூட்டங்கள் படர்ந்து செல்லும் போது, ஜிப் லைனில் தொங்கியபடி சாகச சுற்றுலா மேற்கொள்வது, மறக்க முடியாத புதிய அனுபவமாக உள்ளது,' என்றனர்.