/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொட்டபெட்டா சிகரத்தை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள்
/
தொட்டபெட்டா சிகரத்தை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள்
தொட்டபெட்டா சிகரத்தை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள்
தொட்டபெட்டா சிகரத்தை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள்
ADDED : மே 16, 2024 06:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி : ஊட்டி தொட்டபெட்டா சிகரத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
ஊட்டியில் கோடை சீசன் துவங்கியுள்ளதால் இங்குள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் மற்றும் பிற சுற்றுலா ஸ்தலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறிப்பாக தொட்டபெட்டா மலை சிகரத்தில் உள்ள இயற்கை காட்சிகளை ரசிக்க செல்வது வழக்கம். தொட்டபெட்டா மலை சிகரத்தை காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். கடந்த, 10 ம் தேதி முதல், 14 ம் தேதி வரை, 45 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.