ADDED : மே 23, 2024 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்:பந்தலுார் அருகே, தேவாலா வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில், தலைவர் சக்கீர் உசேன் தலைமையில் நடந்தது. சங்க செயலாளர் சசிகுமார்வரவேற்றார். சங்கத்தின் வரவு செலவு கணக்குகளைசங்க பொருளாளர் லோகேஸ் வரன் சமர்ப்பித்தார்.
தொடர்ந்து, வியாபாரிகள் சங்க செயல்பாடுகள் மற்றும் சங்கத்தின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
அதில், தலைவராக சக்கீர் உசேன், செயலாளராக சசிகுமார், பொருளாளராக உம்மர், துணைத் தலைவர்களாக ஜெயன், அனீஸ், துணை செயலாளர்களாக முகமது, விஜயகுமார் உட்பட பலர் தேர்வு செய்யப்பட்டனர். அதில், சங்க ஆலோசகர்கள்; உறுப்பினர்கள் பங்கேற்றனர்.