/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கால்வாயில் கவிழ்ந்த பள்ளி வாகனம் காயமடைந்த மாணவர்களுக்கு சிகிச்சை
/
கால்வாயில் கவிழ்ந்த பள்ளி வாகனம் காயமடைந்த மாணவர்களுக்கு சிகிச்சை
கால்வாயில் கவிழ்ந்த பள்ளி வாகனம் காயமடைந்த மாணவர்களுக்கு சிகிச்சை
கால்வாயில் கவிழ்ந்த பள்ளி வாகனம் காயமடைந்த மாணவர்களுக்கு சிகிச்சை
ADDED : ஜூலை 19, 2024 02:57 AM

பாலக்காடு;பாலக்காடு அருகே, அரசு உதவி பெறும் பள்ளி வாகனம் கால்வாயிலில் கவிழ்ந்தது; 24 மாணவர்கள் காயமடைந்தனர்.
கேரள மாநிலம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. காற்றுடன் பெய்த மழையால், பாலக்காடு மாவட்டத்தில், கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
பாலக்காடு முனிசிபல் பஸ் ஸ்டாண்ட் அருகே, நேற்று காலை மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மலம்புழா எஸ்.பி., லைன் அருகே நிறுத்தி வைத்திருந்த கார் மீது மரக்கிளை விழுந்து சேதமடைந்தது. கல்பாத்தி சிவன் கோவில் அருகே உள்ள இரு கடைகள் சேதமடைந்தன. செர்ப்புளச்சேரியில் மரம் விழுந்து சுரேஷ்குமார், சரோஜினி ஆகியோரின் வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தன. சம்பவத்தில் அவர்கள் காயமின்றி தப்பினர். அட்டப்பாடி பெட்டிக்கல் பகுதியில் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதித்தது. மங்கலம் அணை பகுதியில் வியாபாரிகள் சங்கத்தின் கட்டிடத்தின் மீது மரம் விழுந்தது.
மரம் விழுந்த இடங்களில், தீயணைப்பு படையினர் மரக்கிளைகளை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். ஆலத்தூர் காட்டுச்சேரியில், ஏ.எஸ்.எம்.எம்., அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி பஸ் நேற்று மாலை, 4:15 மணிக்கு கட்டுப்பாட்டு இழுந்து கால்வாயில் கவிந்தது. பஸ்சில் பயணித்த, 24 மாணவர்கள் மீட்கப்பட்டனர். சிறு காயங்களுடன் தப்பிய மாணவர்களை ஆலத்தூர் தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் நீர் வரத்து ஏற்பட்டுள்ளதால், அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.