ADDED : ஜூலை 05, 2026 09:22 PM

அ நிறம் | அளவு
கூடலுார்: தொரப்பள்ளி -– மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் மரம் விழுந்து, மூன்று மாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கூடலுார் தொரப்பள்ளி சங்கிலி கேட் அருகே, மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை 5:00 மணியளவில், ராட்சத மரம் சாய்ந்து மின்கம்பம் சேதமாகி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நீலகிரி, கேரளா மற்றும் கர்நாடக இடையே வாகன போக்குவரத்து தடைப்பட்டு, வாகனங்கள் சாலையில் ஸ்தம்பித்தன. பொதுமக்கள், சுற்றுலா பயணியர் சிரமப்பட்டனர்.
கூடலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையில் வீரர்கள், மரத்தை அகற்றிய பின், மூன்று மணி நேரத்துக்கு பின், தமிழகம்-–கேரளம்– - கர்நாடக இடையே போக்குவரத்து இயல்புக்கு திரும்பியது.
