/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழங்குடி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த அறிவுரை
/
பழங்குடி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த அறிவுரை
பழங்குடி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த அறிவுரை
பழங்குடி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த அறிவுரை
ADDED : மார் 25, 2024 12:29 AM

பந்தலுார்;பந்தலுார் அருகே பொன்னானி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளியில், 67 வது ஆண்டு விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் வரவேற்றார். ஆசிரியர் ஜூலியட் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
நெல்லியாளம் நகர மன்ற தலைவர் சிவகாமி தலைமை வகித்து பேசுகையில், ''பழங்குடியின மாணவர்கள் வாழ்க்கையில் மேம்பட, கல்வி மட்டுமே துணை நிற்கும். எனவே பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அறிவுரை ஏற்று பழங்குடியின மாணவர்கள் நாள்தோறும் பள்ளிக்கு வருவதிலும், படிப்பதிலும் முழு கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார்.
பென்னை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், முருகேசன் பேசுகையில்,''அரசு மாணவர்கள் கல்வி கற்பதற்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக பழங்குடியின மாணவர்களுக்கு மூன்று வேலை உணவு மற்றும் தேநீர், கடலை உள்ளிட்ட அனைத்தையும் வழங்குகிறது. இவற்றை பயன்படுத்தி மாணவர்கள் படித்து வாழ்வில் வெற்றி பெற முயற்சிக்க வேண்டும்,''என்றார்.
தொடர்ந்து, தலைமை ஆசிரியர்கள் மல்லேசன், விக்னேஸ்வரன், ஸ்ரீதேவி, ஹேமலதா, புட்மாதன், பள்ளி மேலாண்மை குழு தலைவி சரஸ்வதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்ரமணியம் உள்ளிட்டோர் பேசினர்.
போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

