/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காசநோயை எளிதில் குணப்படுத்தலாம்; விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுரை

ADDED : ஏப் 05, 2024 10:34 PM

பந்தலுார் : பந்தலுார் பகுதியில் நெல்லியாளம் நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு, காசநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
காசநோய் தடுப்பு பிரிவு மேற்பார்வையாளர் மோனிஷா, பேசுகையில், ''காசநோய் காற்றில் பரவும் நோயாகும். நோய் பாதித்தவர்கள் இரும்பும் போது அதில் இருந்து வெளியேறும் கிருமிகள், காற்றின் வழியாக அருகில் உள்ளவர்களுக்கும் தொற்றும்.
எனவே, அனைவரும் இதற்கான இலவச பரிசோதனை மேற்கொண்டு, காசநோய் அறிகுறிகள் இருந்தால் தொடர் சிகிச்சை எடுத்து நோயிலிருந்து விடுபடலாம். பயந்து கொண்டு சிகிச்சை எடுக்காமல் இருந்தால், உயிரிழப்பு ஏற்படும்.
எனவே துப்புரவு பணியாளர்கள், பணி மேற்கொள்ளும் போது மிகவும் பாதுகாப்பாகவும் கவனமுடனும் பணியில் ஈடுபடுவது அவசியம்,'' என்றார்.
கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்ரமணியம், 'ஆல் தி சில்ட்ரன்' அமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், மகாத்மா காந்தி பொது சேவா மைய அமைப்பாளர் நவ்ஷாத் ஆகியோர் காசநோயின் பாதிப்புகள் பற்றிபேசினர்.
நிகழ்ச்சியில், நெல்லியாளம் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் (பொ) மலர் கொடி உட்பட பலர் பங்கேற்றனர்.