sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

புலி பல் மற்றும் நகத்துடன் இருவர் கைது

/

புலி பல் மற்றும் நகத்துடன் இருவர் கைது

புலி பல் மற்றும் நகத்துடன் இருவர் கைது

புலி பல் மற்றும் நகத்துடன் இருவர் கைது


ADDED : ஜூலை 15, 2024 02:38 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 02:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி;மஞ்சூர் அருகே, எமரால்டு வனப்பகுதியில் இறந்து கிடந்த புலி. பல் மற்றும் நகத்துடன், 2 பழங்குடியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், மஞ்சூர் பகுதியில் புலிபல் மற்றும் நகங்கள் விற்பனைக்கு உள்ளதாக கூறி, இரண்டு பேர் சுற்றி திரிவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து, ஊட்டி தெற்கு வனச்சரகர் கிருஷ்ணகுமார் மற்றும் வனத்துறையினர் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதியில் விசாரணை நடத்தினர்.

அதில், மஞ்சூர் அருகே உள்ள தும்பனேரி கொம்பை பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன், சந்திரன் ஆகிய இரண்டு பேர் புலி பல் மற்றும் நகத்தை விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், 'அவர்கள் இருவரும் தேன் சேகரிப்பதற்காக எமரால்டு அடுத்த முள்ளிகூர் வனப்பகுதியில் சென்றுள்ளனர். அப்போது அடர்ந்த வனப்பகுதியில் புலி இறந்து கிடந்துள்ளது. புலியின் உடலில் இருந்து பல் மற்றும் நகங்களை எடுத்து விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளனர்,' என, தெரியவந்தது.

இதையடுத்து, நீலகிரி வன அலுவலர் கவுதம், கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த புலியின் உடலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். புலி இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. புலியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, ஆய்வுக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உடல் அந்த பகுதியில் எரிக்கப்பட்டது.

லட்சுமணன், சந்திரன் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வனத்துறையினர் கூறுகையில், 'பிரேத பரிசோதனை அறிக்கை விவரங்கள் வந்த பிறகு புலி இறப்பிற்கான காரணம் தெரியவரும்,' என்றனர்.

வன விலங்கு ஆர்வலர்கள் கூறுகையில்,'எமரால்டு அருகே வனப்பகுதிகளில் ஏற்கனவே புலி வேட்டையாடப்பட்டு தோல் கடத்திய கும்பல் சத்தியமங்கலம் பகுதியில் பிடிப்பட்டது. தற்போது, புலி இறந்து சில மாதங்கள் ஆகியும் வனத்துறையினருக்கு அது பற்றி தெரியவில்லை.

பழங்குடியினர் கூறியதால் தெரிய வந்துள்ளது. இதனால், புலி பாதுகாப்பு குறித்த கண்காணிப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனை அதிகாரிகள் முடுக்கி விட வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us