ADDED : ஜூலை 07, 2026 09:22 PM
அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுார் அதிகரட்டி குன்னக் கொம்பை அருகே சாலையில் இரு சிறுத்தைகள் உலா வந்ததால், மக்கள் அச்சமடைந்தனர்.
குன்னுார் பகுதிகளில் சமீபகாலமாக இரவில் மட்டும் வந்த சிறுத்தைகள் தற்போது பகல் நேரங்களிலும் உலா வருகின்றன. இந்நிலையில், குன்னுார் அதிகரட்டி அருகே குன்னக்கொம்பை சாலையில் இரு சிறுத்தைகள் உலா வந்தது.
இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டுனர் ‘வீடியோ’ எடுத்துள்ளார். அது சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. வனத்துறையினர் கூறுகையில், ‘இருசக்கர வாகனங்களில் செல்வோர் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்,’ என்றனர்.
