ADDED : ஜூலை 21, 2024 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்;பந்தலுார் அருகே, பிதர்காடு சந்தக்குன்னு என்ற இடத்தைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் குணசேகரன், -18, ரவிக்குமார் என்பவரின் மகன் கவியரசன், 17 இருவரும் பாலாவயல் என்ற இடத்தில் உள்ள ஆற்றில் நேற்று மதியம் குளிக்க சென்றுள்ளனர்.
ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் இருவர் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறை மற்றும் பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கரையோரம் ஒதுங்கிய குணசேகரன் உடல் மீட்கப்பட்டு பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கவியரசன் உடலை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.