/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கண்டுகொள்ளாத நெடுஞ்சாலை துறை: களத்தில் இறங்கிய இளைஞர்கள்
/
கண்டுகொள்ளாத நெடுஞ்சாலை துறை: களத்தில் இறங்கிய இளைஞர்கள்
கண்டுகொள்ளாத நெடுஞ்சாலை துறை: களத்தில் இறங்கிய இளைஞர்கள்
கண்டுகொள்ளாத நெடுஞ்சாலை துறை: களத்தில் இறங்கிய இளைஞர்கள்
ADDED : ஜூலை 08, 2024 12:27 AM

பந்தலுார்;பந்தலுார் சாலை சேதமடைந்தும் நெடுஞ்சாலைத்துறை கண்டு கொள்ளாத நிலையில், களத்தில் இறங்கிய இளைஞர்கள் அதனை சீரமைத்தனர்.
பந்தலுார் பஜார் பகுதி சாலை, தமிழக-கேரள இணைப்பு சாலையாக உள்ளது. அத்துடன் தாலுகா தலைநகராக உள்ளதால், நள்தோறும் அதிகளவிலான மக்கள் மற்றும் வாகனங்கள் வருகின்றன.
அதில், பஜார் பகுதி சாலை முழுமையாக பழுதடைந்து குழியாக மாறி உள்ளது. மழை பெய்தால் குழிகளில் தண்ணீர் நிறைந்து, சாலை நிலை தெரியாமல் வாகன ஓட்டுனர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து எழுந்து செல்லும் அவல நிலை தொடர்கிறது.
அத்துடன் கார் உள்ளிட்ட சிறு வாகனங்கள் குழிகளில் ஏறி இறங்கும் போது பழுதடைந்து நிற்பதும் வாடிக்கையாக உள்ளது. 'உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்,' என, இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தனர். ஆனால், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
இதனால் நொந்து போன இளைஞர்கள் சிலர் இணைந்து, குழிகளில் கல்லை கொட்டி, சிமென்ட் கலவை போட்டு தற்காலிகமாக சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
மக்கள் கூறுகையில்,'மழை தீவிரமடையும் முன் நெடுஞ்சாலை துறையினர் இந்த சாலையை சீரமைக்க வேண்டும்,' என்றனர்.